மொஸ்கோவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மொஸ்கோவில் நடந்த வெடிப்பின் விளைவாக, ரஷ்ய ஆயுதப்படைகளின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணையின்படி, செவ்வாயன்று (டிசம்பர் 17) காலை, ஒரு மெஸ்கோவின் ரியாசான்ஸ்கி ப்ராஸ்பெக்டில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, வீட்டின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.
புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் புலனாய்வு பணிகளை மேற்கொண்டனர், மருத்துவ மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடவடிக்கைக்கு உதவ அழைக்கப்பட்டனர்.
குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது என்று ரஷ்ய புலனாய்வு குழுவின் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய பாதுகாப்புப் படைகள் தென்கிழக்கு மொஸ்கோவில் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்ட கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமராக்களில் இருந்து வீடியோவை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன என்று தலைநகரின் அவசர சேவைகளின் பிரதிநிதி கூறியுள்ளார்.