கனடாவின் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் திடீர் இராஜினமாவால் பிரதமர் ஜய்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கமானது குழப்பத்தில் உள்ளது.
சுமார் 10 ஆண்டுகாலம் பிரதமர் பதவியில் இருக்கும் ஜய்டின் ட்ரூடோவின் புகழானது பணவீக்கம், குடியேற்றம் பற்றிய கவலைகளால் சரிந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பை சமாளிக்க அவரது நிர்வாகம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விகளையும் நிதியமைச்சரின் பதவி விலகலானது எழுப்பியுள்ளது.
ட்ரூடோவின் ஆளும் தாராளவாதிகள் ஆட்சியில் நீடிக்க நம்பியிருக்கும் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், திங்கட்கிழமை பிரதமரை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினர் ட்ரூடோவின் பதவி விலகலைக் கோரவில்லை, ஆனால் தேர்தலைக் கோருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.