சிரியாவில் இடம்பெற்றுவந்த போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் விதமாக 63 மில்லியன் அமெரிக்க டொலர்களை இங்கிலாந்து அரசு வழங்கியுள்ளது.
இது குறித்து இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி கருத்துத் தெரிவிக்கையில்,சிரியாவின் எதிர்கால அரசாங்கம் சிறப்பாக அமைய இங்கிலாந்து அரசானது, அரச தந்திர உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த 13 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரால் மில்லியன் கணக்கான சிரியா மக்கள் இன்னமும் முகாம்களில் வசிக்கின்றனர். மேலும் இப்போரினால் சிரியாவின் பெரும்பகுதி சீர்குலைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.