2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நேர்மறை வளர்ச்சி விகிதத்தில் 5.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நிலையான விலையில் (2015) 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,987,544 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3,151,941 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.5 சதவீத நேர்மறையான வளர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், விவசாய பொருளாதார நடவடிக்கைகள், தொழில்துறை பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சேவை பொருளாதார நடவடிக்கைகள் முறையே 3.0 சதவீதம், 10.8 சதவீதம் மற்றும் 2.6 சதவீதம் செல்வ வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.