2024-25 பருவத்துக்கான புதிய மத்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தமது மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கான சம்பள உயர்வுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) ஒப்புதல் அளித்துள்ளது.
ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (21) நடந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் 16 ஆவது நிர்வாகக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அமைவாக, தேசிய அணியின் ஏ நிலை வீரர்கள் மாதத்துக்கு 120,000 பங்களாதேஷ் ரூபாவை ஊதியமாகவும், பி நிலை வீரர்கள் மாதத்துக்கு 100,000 பங்களாதேஷ் ரூபாவை ஊதியமாகவும் பெறுவர்கள்.
அதேநேரம், சி நிலை மற்றும் டி நிலை வீரர்கள் மாதச் சம்பளமாக முறையே 70,000 ஆயிரம் மற்றும் 60,000 ஆயிரம் பங்களாதேஷ் ரூபாவை ஊதியமாக பெறுவார்கள்.
மத்திய ஒப்பந்தத்தில் ஷர்மின் அக்டர் சுப்தா, முர்ஷிதா காதுன், மரூஃபா அக்டர் மற்றும் ரபேயா ஆகியோர் அதிக சம்பள தரங்களுக்கு பதவி உயர்வு பெற்ற 18 வீரர்கள் உள்ளனர்.
பரந்த அளவிலான வீரர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்குவதற்காக, மத்திய ஒப்பந்தத்திற்கு வெளியே 30 மேலதிக வீரர்களை உள்ளடக்கிய மகளிர் தேசிய ஒப்பந்தத்தையும் வாரியம் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை எங்கள் மகளிர் கிரிக்கெட் வீரர்களின் நிதி நல்வாழ்வை உறுதி செய்வதற்கான எங்கள் முயற்சியின் பிரதிபலிப்பாகும்.
அதே நேரத்தில் அவர்களை மிக உயர்ந்த மட்டத்தில் செயல்பட ஊக்குவிக்கிறது என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஃபரூக் அகமட் கூறியுள்ளார்.