குயின்ஸ்லாந்து டென்னிஸ் மையத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடந்த பிரிஸ்பேன் பகிரிங்க டென்னிஸ் தொடர் ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, மெக்சிகோவை சேர்ந்த ரெனாட்டா ஜராசுவாவை 6-4, 6-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இதன் மூலம் பெலாரஷ்ய வீராங்கனையான சபலெங்கா இறுதி 16 சுற்றுக்குள் நுழைந்தார்.
டென்னிஸ் தரவரிசையில் முதலாவது இடத்தில் உள்ள சபலெங்கா, 15 ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தான் யூலியா புடின்ட்சேவாவுடன் 16 ஆவது சுற்றில் விளையாடுகிறார்.
செப்டம்பரில் நடந்த அமெரிக்க பகிரங்க கிண்ணத்தை வென்ற பிறகு சபலெங்கா தனது வாழ்க்கையில் முதல் முறையாக முதல் தரவரிசை வீராங்கனையாக இந்த சீசனை ஆரம்பித்துள்ளார்.
சபலெங்கா கடந்த பிரிஸ்பேன் சர்வதேசப் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டினார்.
ஆனால் எலினா ரைபாகினாவிடம் தோல்வியடைந்தார்.
இதேவேளை, தரவரிசையில் 75 ஆவது இடத்தில் உள்ள ஜராசுவா, நடப்பு பிரிஸ்பேன் போட்டியின் முந்தைய சுற்றில் பல்கேரிய வீராங்கனை விக்டோரியா டொமோவாவை (6-0, 6-3) வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.