“காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என அறிவித்துவிட்டதன் பின்னணியில் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதிச் செய்து வருகின்றன.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் 5 பாடல்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.