போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசமான கல்கிசை படாஓவிட்ட பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட படஓவிட பொலிஸ் நிலையமானது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய ஆகியோரால் புதன்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.
3250 வீடுகளையும் 12,990 மக்களையும் கொண்ட கட்டுகுருந்துவத்தை கிராம சேவை பிரிவில் 545A இல் பொலிஸ் சாவடி அமைந்துள்ளது.
இப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் படாஓவிட்ட பொலிஸ் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.