அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் லாஸ் வேகாஸில் (Las Vegas) அமைந்துள்ள ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது.
புத்தாண்டு தினமான புதன்கிழமையன்று (01) இடம்பெற்ற இந்த வெடிப்பில் வாகனத்திற்குள் இருந்த அதன் சாரதி உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
வெடித்துச் சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது.
அவர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார் – அவரது வெற்றிகரமான 2024 அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கான நன்கொடைகளை பில்லியனர் வழங்கினார்.
அது மாத்திரமல்லாது அவர் ட்ரம்பின் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தும் பணியையும் பெற்றுள்ளார்.
இதனிடையே லாஸ் வேகாஸில் நடந்த சம்பவம் ஒரு சாத்தியமான பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்படுவதாக மூன்று மூத்த அமெரிக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், வெடிப்புக்கான காரணத்தை இதுவரை அதிகாரிகள் கண்டறியவில்லை.