சிட்னி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமான அவுஸ்திரேலிய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
தொடரில் ஒரு ஆட்டம் சமனிலையில் முடிந்த நிலையில் அவுஸ்திரேலியா 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி வெள்ளிக்கிழமை காலை சிட்னியில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 72.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இந்திய அணி சார்பில் அதிகபடியாக ரிஷாப் பந்த் 40 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வந்த அவுஸ்திரேலியா போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 09 ஓட்டங்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.