தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக தெற்கு கரையோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (05) இரவு, மருதானையிலிருந்து தெற்கு களுத்துறைக்கு பயணித்த ரயிலொன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், தெற்கு காரயோர மார்க்கமூடான ரயில் சேவையின் ஒர ரயில் பாதை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வரும் பணிகளை ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்திருந்தனர்.