இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹாமில்டனின் செடான் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (08) காலை 06.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்தது.
எனினும், ஹாமில்டனில் தொடரும் தொடர்ச்சியான மழையால் நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வெள்ளை-பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டி20 தொடரை நியூஸிலாந்து 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
அதன் பின்னர் ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் நியூஸிலாந்து ஒன்பது விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.