இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் செய்து வருகிறது.
இன்னிலையில் இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக வி. நாராயணனை (தமிழகம் குமரி மாவட்டம் ) மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது.
வரும் 14-ம் திகதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். இவர் இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக தற்போது உள்ளதுடன் இவர் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.