சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் HMPV வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை எனவும், இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல எனவும் 20 வருடங்களாக இருந்து வரும் வைரஸ் எனவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட பேராசிரியை நிலிகா மாளவிகே, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இலங்கையிலும் HMPV வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இந்த ஆண்டு HMPV வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இன்னும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த வருடம் (2024) கண்டி பிரதேசத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் உலக சுகாதார அமைப்பு வழங்கிய தரவுகளின்படி, சீனாவில் HMPV வைரஸை விட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களின் தொற்றுகள் அதிகம் என்றும் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் பீதியும் எழுந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா 19 தொற்றுநோய் நிலைமைக்கு மீண்டும் வருமா? என்று ஒரு கேள்விகளும் மக்கள் மத்தியில் உள்ளது .
ஆனால் உண்மை என்னவென்றால், இந்த வைரஸ் இருபது ஆண்டுகளாக உலகில் எங்கும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.