அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (09) காலை 6.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.