2022 அவுஸ்திரேலியன் ஓபனுக்கு முன்னதாக மெல்போர்னில் கொவிட்-19 தடுப்பூசி விடயத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது, தனக்கு “விஷம்” கலந்த உணவு வழங்கப்பட்டதாக நோவக் ஜோகோவிச் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
2025 அவுஸ்திரேலிய ஓபன் போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அதிர்ச்சியூட்டும் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வியாழன் (09) அன்று வெளியிட்ட நீண்ட செவ்வியில் 37 வயதான செர்பிய வீரர்,
எனக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. மெல்போர்னில் உள்ள அந்த ஹோட்டலில், எனக்கு விஷம் கலந்த சில உணவுகள் கொடுக்கப்பட்டதை நான் உணர்ந்தேன்.
எனினும் நான் தனிமைப்படுத்தல் நிறைவு பெற்று நாடு திரும்பியதும் இதை எங்கும் பகிரங்கமாகக் கூறவில்லை என்றார்.
24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச் அடுத்த வாரம் அவுஸ்திரேலிய ஓபனில் 25 ஆவது பெரிய பட்டத்திற்கான தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.