நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுசீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட கடவுசீட்டுக்களின் எண்ணிக்கை 1,200 ஆக இருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால், கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு தனி பீடம் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அன்னதா விஜேபால தெரிவித்தார்.
அந்த பீடம் ஊடாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக கடவுசீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்