தமிழர்களின் மரபை பறைசாற்றும் விதமாக பிரித்தானிய நேரப்படி இன்று மாலை 6.30க்கு வருடாந்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழாவினை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வை வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக மகளிர் அணியின் தேசிய ரீதியான தவைவரும், கோவை தெற்கு தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சிறிநிவாசன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். மேலும், பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தைத்திருநாள் விழாவில் கலை , கலாச்சார நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விழாவானது பிரித்தானிய தமிழர் பேரவையியால் இவ்வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.