ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை என்றும், இறுதி விவரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) புதன்கிழமை பிற்பகுதியில் கூறினார்.
மத்தியஸ்தர்களான அமெரிக்காவும் கட்டாரும் ஒப்பந்தத்தை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் நெதன்யாகுவின் இந்த அறிக்கை வந்துள்ளது.
இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியில் பேரழிவு தரும் போரை இடைநிறுத்த ஒப்புக் கொண்டதாக மத்தியஸ்தர்கள் புதன்கிழமை (15) அறிவித்தனர்.
இது எதிரிகளுக்கு இடையேயான கொடிய மற்றும் மிகவும் அழிவுகரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை உயர்த்தியது.
மூன்று கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் காசாவில் உள்ள போராளிகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட பல இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பதை உறுதியளிக்கிறது.
மேலும் காசாவில் இடம்பெயர்ந்த நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் எஞ்சியிருக்கும் பகுதிகளுக்கு திரும்ப அனுமதிக்கும்.
15 மாத காலப் போரால் அழிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் மனிதாபிமான உதவி தேவைப்படுவதையும் இது நிவர்த்தி செய்யும் என்றும் மத்தியஸ்தர்கள் கூறுகின்றனர்.
கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, போர்நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை (19) முதல் அமலுக்கு வரும் என்றும், அதன் வெற்றி இஸ்ரேலும் ஹமாஸும் “இந்த ஒப்பந்தம் சரிந்துவிடாமல் இருக்க நல்ல நம்பிக்கையுடன் செயல்படும்” என்று கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வொஷிங்டனில் இருந்து ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்தினார்.
இதனிடையே, ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை என்றும், இறுதி விவரங்கள் கலந்தாலேசிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை பிற்பகுதியில் கூறினார்.
கட்டாரின் பிரதமரும், ஜனாதிபதி ஜோ பைடனும் சில மணிநேரங்களுக்கு முன்னர் அறிவித்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறாரா என்பதை நெதன்யாகு வெளிப்படையாகக் கூறவில்லை.
இது குறித்த ஒரு அறிக்கையில் நெதன்யாகு, தற்போது ஒப்பந்தம் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும் இறுதி விவரங்கள் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே முறையான பதிலை வெளியிடுவேன் என்று கூறினார்.
இதனிடையே, பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை உறுதி செய்வதில் அந்த விவரங்கள் மையமாக உள்ளன என்று பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த பெயர் தெரியாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எந்தவொரு ஒப்பந்தமும் நெதன்யாகுவின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் ஹமாஸ்-போரில் காஸாவில் பொது மக்கள் மற்றும் போராளிகள் உட்பட 46,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் 2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கியது.
போராளிகள் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து சுமார் 1,200 பேரைக் கொன்று 250 பேரை சிறைபிடித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் உயிரிழந்து விட்டதாகவும் நம்பப்படுகிறது.