வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது
வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்றவற்றை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுத்தனர்.
இந்த ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் ஆரம்பமாகியதுடன் அதனைத்தொடர்ந்து யாழ் நகர்ப்பகுதிக்குள் பேரணியும் துண்டுப்பிரசுரம் வழங்கலும் இடம்பெற்றது. தொடர்ந்து விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.