கினிகத்தேன நகரில் இன்று (18) காலை உணவகம் இடிந்து விழுந்ததில் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்பிற்காக நகருக்கு வந்த மாணவர்கள் சிற்றுண்டிச்சாலையில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அவர்கள் இருந்த அடித்தளத்தின் தளம் சுமார் 15 அடி சாய்வாக விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பற்ற கட்டுமானத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.