இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
எனெனில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சில நாட்களே உள்ள நிலையில், 2025 பிக் பாஷ் லீக் தொடரில் வெள்ளிக்கிழமை (17) சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முழங்கையில் காயம் அடைந்தார்.
காயம் குணமாகும் வரை ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளமையினால், எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்ப்பாரா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.
எவ்வாறெனினும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் தகவல்களுக்கு அமைவாக ஸ்டீவ் ஸ்மித் ஜனவரி 21 ஆம் திகதி சிட்னியில் ஒரு நிபுணரைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் இலங்கை தொடரில் பங்கேற்பது அந்த ஆலோசனையின் முடிவுகளைப் பொறுத்து அமையும்.
அவுஸ்திரேலிய அணியின் வழக்கமான தலைவர் பேட் கம்மின்ஸ் இலங்கையுடனான தொடரில் இல்லாத நிலையில் 35 வயதான ஸ்டீவ் ஸ்மித்துக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்கனவே ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், வலது கை துடுப்பாட்ட வீரர் முழங்கை காயங்களுடன் மிகவும் மோசமான கடந்த காலத்தைக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.