இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வோர்ன்-முரளி டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது.
இந்த தொடருக்கான டிக்கெட்டுகளை www.srilankacricket.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என SLC அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு வித்யா மாவத்தையிலும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கான கருமப்பீடங்கள் திறக்கப்படும்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வோர்ன்-முரளி டெஸ்ட் தொடர் ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் SLC அறிவித்துள்ளது.