அவுஸ்திரேலிய ஓபனில் புதன்கிழமை (22) எட்டாம் நிலை வீராங்கனையான எம்மா நவரோவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இகா ஸ்விடெக்கின் 6-1, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
2 ஆம் நிலை வீராங்கனையான போலிஸ் வீராங்கனையான ஸ்விடெக் போட்டியில் ஒரு செட்டையும் கைவிடவில்லை.
அது மாத்திரமல்லாது மெல்போர்ன் பூங்காவில் தனது முதல் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக ஆறாவது கிராண்ட் ஸ்லாம் கிண்ணத்துக்கான போராட்டத்தில் மொத்தமாக 14 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியடைந்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு 15க்கும் குறைவான ஆட்டங்களை விட்டுக்கொடுத்த இறுதி வீராங்கனை மரியா ஷரபோவா ஆவார்.
போட்டியின் பின்னர் உரையாற்றிய 23 வயதான வீராங்கனை, ஒட்டுமொத்த போட்டியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
இதேவேளை, பெண்களுக்கான மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸ், எலினா ஸ்விடோலினாவை தோற்கடித்து அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் 29 வயதான அமெரிக்க வீராங்கனை உக்ரேனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவை 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
அவர் ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், 2024 ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவருமான இகா ஸ்விடெக்கை அரையிறுதியில் மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக எதிர்கொள்கிறார்.