நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் தோஷம் என்பது இருக்கும். நம்முடைய ஜாதகத்தில் தோஷம் இருக்கலாம், செய்கின்ற தொழிலில் தோஷம் ஏற்படலாம்.
அதேபோல் நாம் இருக்கக்கூடிய இடத்தை பொருத்தும் நமக்கு தோஷம் ஏற்படும்.
அந்த தோஷத்தை தான் நாம் வாஸ்து தோஷம் என்று கூறுகிறோம்.
நாம் குடியிருக்க கூடிய வீடு சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டின் அமைப்பு சரியாக இருந்தால் தான் நாம் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
வாஸ்து ரீதியான தோஷங்கள் இருக்கக்கூடிய வீட்டில் நாம் குடியிருக்கும் பொழுது நாம் நினைத்த காரியத்தை நம்மால் செய்ய முடியாது.
அதுவும் ஒருவித தடங்கலாகவே வந்து அமையும். அப்படிப்பட்ட நேரத்தில் அதை சரி செய்ய முயற்சி செய்வோம்.
சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய இஷ்டத்திற்கு ஏற்றார் போல் நாம் சரி செய்து கொள்ளலாம்.
ஆனால் வாடகை வீடாக இருக்கும் பொழுது நம்மால் எதுவுமே செய்ய முடியாது.
எந்த வீடாக இருந்தாலும் நாம் இருக்கக்கூடிய வீடு தோஷம் இல்லாமல் இருந்தால்தான் நம்முடைய முயற்சிகள் வெற்றி அடையும்.
அந்த தோஷத்தை நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சொந்த வீடு கனவை நினைவாக்கும் வழிபாடு வாஸ்து பகவான் என்று ஒவ்வொருவர் இருக்கிறார். அவரை நினைத்து செய்யக்கூடிய ஒரு வழிபாடு தான் இந்த வாஸ்து தீப வழிபாடு.
குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடிய வாஸ்து நாளில் வாஸ்து பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு வாஸ்துரீதியாக இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக அன்றைய நாளில் சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் பூமி பூஜை செய்வார்கள், கிணறு தோன்றுவதற்காக பூஜை செய்வார்கள், பூமி சம்பந்தப்பட்ட பூஜைகள் அனைத்தையும் செய்வதற்கு உகந்த நாளாக அந்த நாள் திகழ்கிறது.
அதே நாளில் நாம் தீபமேற்றி சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் சொந்த வீடு கட்டுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். நாம் இருக்கிற வீட்டில் இருக்கக்கூடிய தோஷங்களும் நீங்கும். அந்த வழிபாட்டை தெரிந்து கொள்வோம்.
வாஸ்து நாள் என்பது ஜனவரி மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை அன்று வருகிறது. இந்த வாஸ்து நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டும்தான் நாம் வாஸ்து நேரம் என்று கூறுகிறோம். அந்த நேரம் காலை 10:41 முதல் 11:17 வரை இருக்கிறது. இந்த நேரத்தை தான் வாஸ்து நேரம் என்று கூறுகிறோம்.
இந்த நேரத்தில் நம்முடைய வீட்டிலேயே நாம் எளிமையாக தீபமேற்றி வழிபாடு செய்தோம் என்றால் சிவபெருமானின் அருளாலும் வாஸ்து பகவானின் அருளாலும் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்குவதோடு, சொந்த வீடு கனவும் நினைவாகும். –
இந்த தீபத்தை வாஸ்து நேரத்தில் வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டும். முதலில் வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக சுத்தம் செய்து மஞ்சளை தடவி அதற்கு மேல் பச்சரிசி மாவினால் ஏதாவது ஒரு கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள்.
அந்த கோலத்தின் நான்கு திசைகளிலும் நான்கு அகல் விளக்குகளை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்குகள் கோலத்திற்கு உள்புறமாக இல்லாமல் வெளிப்புறமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த நான்கு விளக்குகளில் இருக்கக்கூடிய தீபம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தீபத்தை ஏற்றி வைத்த பிறகு அன்றைய தினத்தில் நம்முடைய வீட்டில் என்ன இருக்கிறதோ அதை சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
பிறகு “ஓம் சிவாய நம ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து சிவபெருமானிடம் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை முன் வைக்க வேண்டும். சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது சொந்தமாக இடம் வாங்க வேண்டும் அல்லது வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷம் நீங்க வேண்டும் என்று உங்களுடைய வேண்டுதலை முன்வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு கற்பூர தீபதூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த தீபத்தை சரியாக வாஸ்து நேரம் ஆரம்பிக்கும் பொழுது ஏற்ற வேண்டும்.
அந்த வாஸ்து நேரம் முடியும் வரை தீபம் எறிய வேண்டும். வாஸ்து நேரம் முடிந்ததும் தீபத்தை குளிர வைத்து விடலாம்.
எதிர்காலம் சிறப்பாக அமைய வழிபாடு இந்த நாளில் இந்த நேரத்தில் சிவபெருமானை நினைத்து இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வீடு, நிலம் தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.