2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை இதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியத் துடன்
குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
மேலும் புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க கூடியவர்கள் 20,000 என்பதுடன், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2024 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிகூடிய மதிப்பெண்களை பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளதுடன் நேற்று வெளியான பெறுபேறுகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவர் 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்