உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமெனத் தான் நம்புவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான வரைவு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.