கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்திருந்த முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்த நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை குயில்வத்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த வெளிநாட்டவர்களில் ஒருவேரே குறித்த முச்சக்கரவண்டியை செலுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்த ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இருவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.