டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 2,300 நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
டிஜிட்டல் அடையாள அட்டை ஊடாக நிதி நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள் மற்றும் வரி செலுத்துதல்களை இலகுபடுத்தப்படும்.
டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்க 1,000 கோடி நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.