இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு ஈடுபடுத்தப்படும் முப்படை வீரர்களின் எண்ணிக்கை 40% குறைக்கப்பட்டுள்ளது, மேலும் வீரர்களின் கவச வாகனங்கள் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
77வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (பிப்ரவரி 4) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
அணிவகுப்பில் பங்கேற்ற மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1,873 ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இம் முறை சிறப்பு நிகழ்வுகளாக விமானப்படையின் மூன்று விமானங்கள் மற்றும் இலங்கை கடற்படையினரால் ஒரு கப்பலில் இருந்து இருபத்தைந்து (25) துப்பாக்கி வணக்கமும் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
77வது சுதந்திர தின கொண்டாட்டங்களை பொதுமக்கள் பார்வையிட அரசாங்கம் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து வருபவர்கள் சோதனை செய்யப்பட்ட பின்னர் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அனுப்பப்பட்டார்கள் என்று செய்தித் தொகுப்பாளர் கூறினார்.
சுதந்திரத்தினத்தை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொண்டாட்டத்தை பார்வையிட வந்த பொதுமக்கள் அனைவரும் அடையாள அட்டைகளை சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பப்பட்டார்க்ள என்பதும் குறிப்பிடத்தக்கது.