சந்து மொண்டேட்டியின் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளது.
கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் 7 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படமானது ”மிகவும் எதிர்பார்கப்படும் இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் சாதனையாக திரைத்துறையில் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.