பீரிமியர் லீக் காற்பந்தாட்ட போட்டிகளில் இன்றையதினம் இடம்பெற்ற போட்டியில் வெஸ்ட்ஹேம் அணியை 2-1 என வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு செல்சி அணி முன்னேறியுள்ளது.
இப்பருவகாலத்திற்கான பீரிமியர் லீக் காற்பந்தாட்ட போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் முக்கியமான போட்டியொன்றில் செல்சி அணி வெஸ்ட்ஹெம் அணியை எதிர்த்தாடியது. போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் கோல் போடும் முயற்சியில் தீவீரமாக களமிறங்கின. இருந்தும் எதுவும் கைகூடவில்லை.
இந்நிலையில் முதல் பாதி முடிவடைய 3 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் வெஸ்ட்ஹெம் அணியின் ஜர்ரோட் போவன் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார்.
பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் போட்டியில் முன்னிலைப்பெற வெஸ்ட்ஹெம் அணியும் கோலினை பதிவு செய்ய செல்சி அணியும் முயற்சித்த நிலையில் 64வது நிமிடத்தில் செல்சி அணியின் பெட்ரோ நெடோ தனது ஸ்டைலில் போட்டியை சமப்படுத்தி அசத்தினார்.
1-1 என போட்டி சமநிலையான நிலையில் 74வது நிமிடத்தில் பால்மர் அடித்த பந்து வெஸ்ட்ஹெம் அணியின் அரோன் வன் பிசாக்கதவின் காலில் பட்டு செல்சி அணிக்கு ஓன்கோலாக மாறியது. இதனையடுத்து 2-1 என்ற அப்படையில் செல்சி அணி வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியது.