ப்ளூ கோஸ்ட் (Blue Ghost lunar) விண்கலம், சந்திரனுக்கு வரலாற்றுப் பயணத்தைத் தொடங்க இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், விண்வெளியின் இருளில் நீல நிறத்தில் பிரகாசிக்கும் நமது கிரகத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோவை கைப்பற்றியுள்ளது.
நிலவுக்கு செல்வதற்கு முன்னர் தற்சமயம் பூமியின் சுற்றுப் பாதையை சுற்றி வரும் விண்கலம் இந்தக் காட்சியை கடந்த ஜனவரி 23 ஆம் திகதி கைப்பற்றியுள்ளது.
பூமிக்கு மேலே 4,200 மைல் (6,700 கிமீ) தொலைவில் இருந்து இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ப்ளூ கோஸ்ட் விண்கத்தின் பயணம் கடந்த ஜனவரி 15 அன்று தொடங்கப்பட்டது, மேலும், இது எதிர்வரும் மார்ச் 2, அன்று சந்திர மேற்பரப்பை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளூ கோஸ்ட் விண்கலம் நிலவுக்குச் செல்வதற்கு முன் பூமியைச் சுற்றிம் பணிகளை முன்னெடுத்துள்ளது.
ப்ளூ கோஸ்ட் பணியானது நாசாவின் சந்திரன் நோக்கி சர்வதேச அளவில் பரிசோதனை முயற்சிகளின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியாகும்.