2025 ஆம் ஆண்டிற்கான 67வது கிராமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விருது வழங்கும் விழாவில் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட 70 வயதான அமெரிக்க தொழிலதிபரும், இசை கலைஞருமான சந்திரிகா டாண்டன் (Chandrika-Tandon) விருது வென்று சாதனை படைத்துள்ளார்.
அவர் உருவாக்கிய த்ரிவேணி என்ற ஆல்பத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.