இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவா (Petra Kvitova) தனது குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து மீண்டும் விளையாட்டுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார்.
உலகின் முன்னாள் இரண்டாம் நிலை வீராங்கனையான க்விடோவா 15 மாதங்கள் டென்னிஸிலிருந்து விலகி இருந்தார்.
இறுதியாக 2023 அக்டோபரில் நடந்த சீன ஓபனில் அவர் விளையாடினார்.
2011 மற்றும் 2014 ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்ற 34 வயதான செக்குடியரசு வீராங்கனை, 2024 ஜூலை மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதையடுத்து அவர் போட்டிக்கு மீண்டும் திரும்பும் முடிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர், டெக்சாஸின் ஆஸ்டினில் பெ்பரவரி 24 அன்று தொடங்கும் ஏடிஎக்ஸ் ஓபனுடன் போட்டிகளில் மீண்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
அவர் 31 பெண்கள் டென்னிஸ் சங்க (WTA) ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.