போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டின வீரர் லியோனல் மெஸ்ஸியை விட சிறந்தவர் என்று நம்புகிறாரா என்பது குறித்து நேர்மையாக கருத்து தெரிவித்தார்.
ஸ்பெயின் ஊடகமான LaSexta தொலைக்காட்சியில் இடம்பெற்ற விசேட நேர்காணலின் போது உரையாற்றும் போதே அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த உரையில் அவர்,
சிலர் லியோனல் மெஸ்ஸியை அல்லது பீலே மற்றும் மரடோனா போன்ற புகழ்பெற்ற கால்பந்து வீரர்களை மக்கள் விரும்பலாம்.
அந்த விருப்பத்தினை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆனால், தான் எப்போதும் இல்லாத மிகவும் முழுமையான கால்பந்து வீரர் என்று உறுதியாக நம்புகின்றேன்.
நான் கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர். கால்பந்து வரலாற்றில் என்னை விட சிறந்த வீரர் யாரையும் நான் பார்த்ததில்லை.
இதை நான் இதயத்திலிருந்து உண்மையாகக் கூறுகின்றேன் – என்றார்.
ரொனால்டோ கால்பந்து விளையாட்டின் மிகப்பெரிய பாராட்டுகளுக்காக லியோனல் மெஸ்ஸியுடன் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.
சிறந்த வீரர் யார் என்பது குறித்து ரசிகர்களிடையே பழைய விவாதம் மிண்டும் தூண்டப்பட்டுள்ள நிலையில் அவரது இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஐரோப்பிய ஊடகத்துடனான நேர்காணலின் போது அல் நாசர் நட்சத்திரம், தனக்கும் மெஸ்ஸிக்கும் நீண்ட கால கால்பந்து போட்டி இருந்த போதிலும் ஒருபோதும் மோசமான உறவைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் வெளிப்படுத்தினார்.
“மெஸ்ஸியுடன் நான் ஒருபோதும் மோசமான உறவைக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் 15 வருட விருதுகளைப் பகிர்ந்து கொண்டோம், நாங்கள் எப்போதும் நன்றாகப் பழகினோம். அவருக்காக ஆங்கிலத்தை மொழிபெயர்த்தது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. அவர் தனது கழகத்தை பாதுகாத்தார், என்னுடைய அணிக்காக நான் போராடினேன், அது எங்கள் இருவரையும் சிறந்த நிலைக்கு உயர்த்தியது ” – என்றார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலக கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட்டில் அழியாத முத்திரையை பதித்துள்ளார்.
நேர்காணலின் போது அவர் தனது பல்துறைத்திறன் மற்றும் கோல் அடிக்கும் திறமை அவரை ஒரு முழுமையான வீரராக ஆக்குகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.