இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சின்தக்க அபே விக்ரம அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன
மாவட்ட செயலாளர் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டன.
இதில் எமது நாட்டினை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளிடமிருந்து நாட்டை மீட்பதற்காக அரும்பணியாற்றிய கொங்கலகொடபண்டா,கெப்பட்டிபொலதிசாவ,சிறில சிறிஆறூமுகநாவலர்,ரீ.பீ.ஜாயா ஆகியோர் அரும் பணியாற்றியுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் அவர்களை நினைவுகூர்ந்தார்.
நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள்,சிற்றூழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்