77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரக்காளி ஆலயத்தில் இந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்த பூஜையை உதய ராகவ குருக்கள் நடாத்தியதோடு இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்க சந்திரசேகரன், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்படி நிகழ்வானது இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது…