இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏராளமான முக்கிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதனடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, சாமிந்த்ராணி கிரியெல்ல, வி. ராதாகிருஷ்ணன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் “தேசிய தின கொண்டாட்டங்கள் எங்கள் கடமை என்பதால் நாங்கள் எப்போதும் அதில் பங்கேற்போம் ” என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா காயத்த கருணாதிலக்க தெரிவித்தார்.