77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மொத்தம் 285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஆறு பெண் கைதிகள் இருப்பதாக சிறைச்சாலைகள் துறை தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கிய சிறப்பு பொது மன்னிப்பின் கீழ் வாரியபொல சிறைச்சாலையில் அதிகபட்சமாக மொத்தம் 33 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் இருந்து 31 கைதிகள், அனுராதபுரத்தில் இருந்து 22 கைதிகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு அபராதம் செலுத்த முடியாத கைதிகளுக்கு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை வழங்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இன்று சிறப்பம்சமாக கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை திறந்த வெளியில் பார்வையிட்டு வழங்க முடிந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறினார்கள்.