கொலை முயற்சி குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (04) பிற்பகல் மட்டக்குளி, கண்டிராவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவலை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
19.11.2022 அன்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் 18.01.2023 அன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் மற்றுமோர் நபரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்த குற்றங்களில் சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.