கடந்த அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் (Online Safety Act) பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயத்தினை சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றில் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்று மனுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.