அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்த இலங்கையர்களுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் விசா விண்ணப்பத்தை கண்காணிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், அனைத்து விசா தொடர்பான ஆவணச் சமர்ப்பிப்புகள் மற்றும் சேகரிப்புகள் பெப்ரவரி 08, முதல் VFS கூரியர் மூலம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேரடி சமர்ப்பிப்புகள் அல்லது சேகரிப்புகளை இனி ஏற்கப்போவதில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், விசா விண்ணப்பதாரர்கள் தாமதத்தைத் தவிர்க்க புதுப்பிக்கப்பட்ட செயல்முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிகமாக பெப்ரவரி 08 முதல், விண்ணப்பதாரர்கள் பிரீமியம் டெலிவரி சேவைகள் மற்றும் கட்டண விருப்பங்கள் பற்றிய விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தையும் பார்வையிடலாம் என்று அமெரிக்க தூதரகம் கூறுகிறது: