அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது.
குறிப்பாக எல்லை மற்றும் குற்ற அமுலாக்கத்தில் சலுகைகளுக்கு ஈடாக கனேடிய ஏற்றுமதிகள் மீது அதிகபடியான வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் அதனை 30 நாட்களுக்கு தாமதப்படுத்துவதாக கடந்த திங்களன்று தெரிவித்தார்.
எவ்வாறு இருப்பினும் கனடாவின் 75% ஏற்றுமதிகளும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது என்பதால் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்வதற்காகவும், வணிக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் டொரொண்டோவில் ஒரு நாள் உச்சிமாநாட்டினை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
குறித்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கங்கள்
1. உள்நாட்டு வணிக தடைகளை குறைத்தல்.
2. ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்துதல்.
3. தொழில்துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்த்தல்.
4. நீண்ட அனுமதி செயல்முறைகளை சீர்செய்தல்
5. அலுமினியத்தை ஐரோப்பாவிற்கு திருப்பிவிடத் தீர்மானித்துள்ளமை
இதேவேளை இந்த உச்சிமாநாட்டில் வணிகத் தலைவர்கள், தொழில்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும் கனேடிய பிரதமர் அலுவலகம் இதில் பங்கேற்க தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை.
இந்நிலையில் குறித்த உச்சிமாநாடு, அமெரிக்கா சார்ந்த பொருளாதாரத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையை குறைத்து, கனடாவுக்கென தனி வளர்ச்சிப் பாதை உருவாக்கும் முயற்சியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.