முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
அதன்படி கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.
செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தது மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான அறிக்கைகளை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகே மீது குற்றப் புலனாய்வுத் துறை 07 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது