மொபைல் திருடர்களை கட்டுப்படுத்தும் முயற்சியை லண்டன் பெருநகர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதனால், இங்கிலாந்தின் தலைநகரில் ஒரே வாரத்தில் திருடப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட மொபைல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்த திருட்டு தொடர்பில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன் முழுவதும் ஒரு வார ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, தலைநகரின் காவல்துறை குறிப்பாக மொபைல் திருடர்களை குறிவைத்தது.
இது வெஸ்ட் எண்ட் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் போன்ற பகுதிகளில் கிட்டத்தட்ட 40% திருட்டுக்கள் பதிவாகியுள்ளன.