காதலர் தினத்தையொட்டி காதலர் வாரம் பிப்ரவரி 7 முதல் ரோஸ் டே-வுடன் ஆரம்பமாகியது. அந்த வகையில் காதலர் வாரத்தின் இரண்டாவது நாளான பெப்ரவரி 8 ப்ரப்போஸ் டே (Propose Day) கொண்டாடப்படுகிறது. அன்பு நிறைந்த காதல் வாரத்தின் இரண்டாம் நாள் காதல் துணையை தேடுபவர்களால் மட்டுமல்ல, ஏற்கனவே உறுதியான உறவில் இருக்கும் தம்பதிகளாலும், மிகுந்த உற்சாகத்துடனும் காதலை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்துடனும் கொண்டாடப்படுகிறது.
அன்பு, பாசம் மற்றும் பாராட்டுகளை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த சிறப்பு நாளின் மூலம், காதலர்கள் தங்கள் உறவில் அடுத்த படியை எடுக்க முன்னேறுகிறார்கள். அவர்கள் தங்கள் துணையாக இருக்க விரும்பும் நபரிடம் தங்கள் உணர்வுகளை ஒரு சிறப்பு வழியில் வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. இந்த நாளுக்காக நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களும் உண்டு. இத்தகைய ப்ரொபோஸ் டே-வின் வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றியும், ப்ரொபோஸ் பண்ணும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்களை பற்றியும், அதற்கான சில யோசனைகளையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ப்ரொபோஸ் டே வரலாறு:
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 8 ஆம் திகதி ப்ரொபோஸ் டே கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பெப்ரவரி 8 ஆம் திகதி ப்ரொபோஸ் டே கொண்டாடப்படும். இந்த நாள் தங்கள் உணர்வுகளை துணையிடம் வெளிப்படுத்த விரும்புவோருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், காதலர்கள் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களிடம் அன்பான வார்த்தைகளில் திருமணம் அல்லது உறவை முன்மொழிகின்றனர்.
காதலர் வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ப்ரொபோஸ் டே தொடங்கப்பட்டதாக உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தை கொண்டாடுவது மேற்கத்திய உலகில் தொடங்கியது.
உலகமயமாக்கப்பட்ட பிறகு, பிற நாடுகளில் இது உற்சாகமாக கொண்டாடத் தொடங்கியது. இருப்பினும், ப்ரொபோஸ் டே-யின் வரலாறு குறித்து அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. சமீப ஆண்டுகளில் ப்ரொபோஸ் டே கொண்டாட்டம் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த நாள் ஆனது காதலர்கள் தங்கள் துணைக்கு ப்ரொபோஸ் செய்வதன் மூலமும், தங்களின் உறவுகளை முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலமும் தங்கள் அன்பை வெளிக்காட்ட வாய்ப்பளிக்கிறது.
ப்ரொபோஸ் டே முக்கியத்துவம்:
பிப்ரவரி 7 அன்று ரோஸ் டே கொண்டாடிய பிறகு, பிப்ரவரி 8 அன்று ப்ரொபோஸ் டே கொண்டாடப்படுகிறது, இது உங்கள் உறவில் அடுத்த கட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சிறந்த வாய்ப்பளிக்கிறது. இந்த நாள் புதிய உறவுகளின் தொடக்கத்தை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இந்த நாளில், பலர் தங்கள் துணையை ஒரு சிறப்பு மற்றும் மறக்கமுடியாத வழியில் ப்ரொபோஸ் பண்ண விரும்புகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் சிறப்பு பரிசுகளை வழங்குகிறார்கள் அல்லது ஒன்றாக ஒரு காதல் பயணத்தை திட்டமிடுகிறார்கள். இது அன்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடுவதற்கும், எதிர்காலத்திற்கான பயணத்தை ஒன்றாகத் தொடங்குவதற்கும் ஒரு நாள்.
ப்ரொபோஸ் டே கொண்டாட சில டிப்ஸ்:
மறக்கமுடியாத ப்ரொபோஸ் டே-விற்கு, முதலில் நீங்கள் ஒரு அழகான இடத்தை தேர்வு செய்யவும், அது வீடாக இருந்தாலும் சரி, கடற்கரையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி, அந்த இடத்தை மெழுகுவர்த்திகள், விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கவும்.
உங்கள் துணையுடன் கழித்த தருணங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து ஒரு வீடியோவை உருவாக்கவும். வீடியோவின் கடைசிப் பக்கத்தில், உங்கள் காதலியை ஆச்சரியப்படுத்தும் ஒரு அன்பான செய்தியுடன் ப்ரொபோஸ் செய்யுங்கள். அதில் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் மற்றும் அவர்களுடன் எப்போதும் நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் வாய்ஸ் மூலம் வெளிப்படுத்துங்கள்
உங்கள் துணையை அழைத்துச் செல்லும் இடங்களை திட்டமிடுங்கள். ஒவ்வொரு இடத்திலும், அந்த இடத்தில் செலவழித்த சிறப்பான நேரத்தை அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் ப்ரொபோஸ் செய்ய வேண்டும்.
உங்கள் துணைக்கு ஒரு காதல் இரவு உணவை ஏற்பாடு செய்யலாம். ஒரு திறந்த உணவகத்தில் முன்பதிவு செய்து, அழகான ரோஜா பூங்கொத்து மற்றும் அழகான கிரீட்டிங் கார்டு மூலம் ப்ரொபோஸ் செய்யுங்கள். அவர்களுக்குப் பிடித்தமான உணவையும் ஆர்டர் செய்தால், அது அவர்களுக்கு சிறப்பான உணர்வைத் தரும்.
ரூஃப்டாப் ப்ரொபோஸ் ஆனது சில அலங்காரங்களுடன் ஒரு மேஜிக்கல் அட்மாஸ்பியரை உருவாக்க முடியும். இரவில் அமைதியான இடத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் கீழ் ப்ரொபோஸ் செய்வது மறக்கமுடியாத சிறந்த தருணமாகும்.
ப்ரொபோஸ் செய்யும்போது நீங்கள் செய்யக்கூடாதவை:
ப்ரொபோஸ் டே என்பது, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இது ஒரு சிறப்பு தருணம் என்பதால், அன்றைய தினம் உங்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் விவாதங்களையும் தவிர்க்கவும். உங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான நாள் என்பதால் விவாதங்களை தவிர்த்து விடுவது நல்லது.
உங்கள் ப்ரொபோஸ் டே திட்டங்களைப் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் முன்பே சொல்லாதீர்கள். நீங்கள் உங்கள் துணையிடம் ப்ரொபோஸ் செய்து, காதலர்களாக மாறியவுடன், மற்றவர்களுடன் இதை பகிர்ந்துகொள்வது சிறந்தது.
இது போன்ற முக்கியமான தருணத்தில் பதற்றம் ஏற்படுவது இயல்பு தான். எனவே என்ன பேசுவது என்பதை பற்றி முன்பே மனப்பாடம் செய்யாமல், அந்தத் தருணத்தில் வரும் வார்த்தைகளை இயல்பாக பேசுங்கள்.
ப்ரொபோஸ் செய்வதற்கு முன், இந்த முடிவுக்கு நீங்கள் இருவரும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு முதலில் உங்கள் துணை உங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறாரா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.