“எல்ல ஒடிஸி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை இன்று (10) முதல் நானுஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையம் வரை ஆரம்பமாகவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிக தேவை காரணமாக இந்த புதிய ரயில் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்த ரயில் நானுஓயாவில் இருந்து பதுளைக்கு செவ்வாய்க்கிழமை தவிர்ந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை 08.10 மணிக்கும், பதுளையிலிருந்து நானுஓயா வரை பிற்பகல் 01.00 மணிக்கும் பயணிக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.