Booking.com ஆல் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரமாக இலங்கையின் சீகிரியா தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் 360 மில்லியனுக்கும் அதிகமான சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டது.
இது சீகிரியாவை சூழவுள்ள விருந்தோம்பல் மற்றும் கவர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையின் ‘கலாச்சார முக்கோணத்தின்’ மையப்பகுதியில் அமைந்துள்ள சிகிரியா, இயற்கையின் சிறப்பையும் ஆழமான வரலாற்றையும் இணைக்கும் ஒரு கட்டாய சுற்றுலா இடமாகும்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சிகிரியா பாறை கோட்டை, மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை வழங்குகிறது மற்றும் பண்டைய இலங்கையின் கட்டிடக்கலை பிரகாசத்தை எடுத்துக்காட்டுகிறது.
5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மன்னன் காசியப்பன் இங்கு தனது அரச தலைநகரை நிறுவியதாக கூறப்படுகிறது.
கோட்டைக்கு ஏறுவது முதல் கிராம வாழ்க்கையின் அமைதியைத் தழுவுவது வரை, சிகிரியா சாகச மற்றும் அமைதியின் மறக்க முடியாத கலவையை வழங்குவதாக Booking.com சுட்டிக்காட்டியுள்ளது.
டிராவலர் ரிவியூ (சுற்றுலா பயணிகளின் கருத்து) விருதுகளின் பதின்மூன்றாவது பதிப்பின் ஒரு பகுதியாக, Booking.com 2025 ஆம் ஆண்டிற்கான பூமியில் மிகவும் வரவேற்கத்தக்க 10 நகரங்களை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.