நுரைச்சோலை அனல் மின் நிலையத்துடன் மீண்டும் மின் இணைப்பு இணைக்கப்படும் வரை மின்வெட்டு அவசியமா என்பது குறித்து இன்று (10) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக CEB குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார விநியோகம் அவ்வப்போது தடைபடும் என எதிர்பார்க்கப்படுவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, விநியோக-தேவை இடைவெளி உருவாக்கப்பட்டுள்ளது.
இது மின்சார விநியோகத்தில் குறுக்கீடுகளை ஏற்படுத்தக்கூடும் என்று CEB தெரிவித்துள்ளது.
900 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு மின்சார விநியோகத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மின்வெட்டு குறித்த முடிவை CEB இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.